Login or register here to access features and facilities.
நீங்கள் ஒரு உள்நாட்டவராகவோ அல்லது வெளிநாட்டவராகவோ இருந்தால் ஒரு குறிப்பிட்ட நாட்டில் ஆதனங்களைக் கொள்வனவு செய்யும் போது ஒழுக வேண்டிய சில சட்டங்களும் விதிமுறைகளும் அங்கு காணப்படுகின்றன. சிறந்த கொள்முதலை செய்ய ஆதனத்தை தேர்ந்தெடுப்பதில் உள்ள நுணுக்கங்களை அறிய இது உதவுகின்றது.
இலங்கையில் ஆதனங்களானது பொதுவாக தீவு முழுவதிலும் காணப்படுகின்றது. அவை இயற்கையான அமைவிடங்கள், வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் சு10ழ அமைந்துள்ளன.
இலங்கை நாடானது 9 மாகாணங்களையும் 25 மாவட்டங்களையும் கொண்டது. அதன் பெருநகரமான கொழும்பு 15 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதலீடு செய்வதற்கு தேர்ந்தெடுக்கக்கூடிய வகையில் ஆதனங்களைக் கொண்டுள்ளது. கொழும்பு, கம்பஹா, கண்டி, காலி போன்ற நகரங்கள் அதிக கேள்வியுடைய (hiபா னநஅயனெ) ஆதனங்களைக் கொண்டுள்ளன. ந Pங்கள் மேற்குறித்த நகரங்களிலொன்றை தெரிவு செய்யும் போது புதிய முதலீட்டினால் என்ன எதிர்ப்பார்க்கின்றீர்கள் என்பதனை சிந்திக்க வேண்டும். விடுமுறை இல்லமொன்றை அமைப்பதற்கான நோக்கமெனின், கண்டி மற்றும் காலி போன்ற நகரங்களை தேர்வு செய்தலே மிகப்பொருத்தமானது. ஏனெனில் அவை சிறந்த இயற்கை வளங்களைக் கொண்டதாகவும் ஓய்வெடுப்பதற்கு பொருத்தமான நகரங்களாவும் காணப்படுகின்றன.
மேற்குறித்த நகரங்களில் ஒரு ஆதனத்தை ந Pங்கள் தேர்வு செய்வ Pர்களானால், ந Pங்கள் ஒரு ரியல் எஸ்டேட் முகவரினைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது பத்திரிகைகளில் பார்க்கலாம் அல்லது டயமெயிசழிநசவலறநடி.உழஅ வலைத்தளத்தினூடாக விரைவான வழிமுறையில் பெற்றுக்கொள்ளலாம். டயமெயிசழிநசவலறநடி.உழஅ வலைத்தளத்தில் ந Pங்கள் எதை தேட திட்டமிட்டுள்ளீர்களோ அதனை அடிப்படையாகக் கொண்டு தேடலை மேற்கொள்ளலாம் என்பதுடன் சில நிமிடங்களில் உங்களின் கனவு இல்லத்தினை கண்டுபிடிக்கலாம். வ Pடொன்றினைக் கட்டுவதற்காக காணியொன்றினைத் தேர்ந்தெடுக்கையில் அதன் அமைவிடம், பயன்பாடுகள் மற்றம் வசதிகள், வலய ரீதியிலான தேவைப்பாடுகள், சராசரி துண்டு விலைகள் போன்றனவற்றை கருத்திற்கொள்ளுதல் வேண்டும். ஏனென்றால் மேற்குறித்த காரணிகள் எதிர்காலத்தில் ந Pஙகள் வ Pட்டினைக் கட்டிய பின்னர் உங்களை நாளாந்த வாழ்க்கையைப் பாதிக்கக்கூடும்.
எவ்வாறாயினும் ஒரு தொடர்மாடி மனையொன்றினைக் கொள்வனவு செய்யும் போது ந Pங்கள் கருத்திற் கொள்ள வேண்டிய விடயங்கள் வேறுபட்டவை.
நீங்கள் தொடர்மாடி மனையொன்றினைக் வாங்குவதற்கு முன்னர் அதனைப் பற்றிய முழு அறிவினைப் பெறுதல், நீங்கள் சிறந்த வீட்டினை தெரிவு செய்வதனை இலகுவாக்கும். மேலும வ Pட்டினை வாங்குவதற்கான நிதித் திட்டத்தினை மேற்கொள்ளவும் உங்களுக்கு யோசனைகளை வழங்கும். இச்செயல்முறையில் கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள்.
சந்தையினை ஆய்வு செய்து நீங்கள் தெரிவு செய்துள்ள ஆதனம் பெறுமதி மற்றும் இருப்பிடம் என்பவற்றின் அடிப்படையில் சரியானது என்பதனை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் சிறந்த ஆதனத்தினை தெரிவு செய்து கொள்வதற்கு உதவியாக House Price Index, Area guides, ROI Calculator, மற்றும் விளம்பரங்களுக்கிடையேயான விலை ஒப்பீடுகள் போன்ற கருவிகளை பயன்படுத்தலாம்.
area guide இன் மூலம் குறித்த நகரத்தைப் பற்றியும் ஆதனைச் சு10ழவுள்ள விடயங்களைப் பற்றியும் நன்றாக அறிந்து கொள்ள முடியும். அதன் மூலம் குறிப்பிட்ட பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் வேலைத்தளத்திற்கு அருகாமையிலான ஒரு ஆதனத்தினை தெரிவு செய்யமுடியும்.
LankaPropertyWeb இனால் வடிவமைக்கப்பட்ட House Price Index ஆனது இலங்கையின்; ஒன்பது மாகாணங்களிலும் கொழும்பிலும் உள்ள ஆதனங்களின் சராசரி விலைகள் தொடர்பான தகவல்களை வழங்குகின்றது. ஆதனத்தின் விலைகளின் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகளை கண்டறிய வௌ;வேறு ஆண்டுகளின் வௌ;வேறு காலாண்டுகளின் தகவல்களை ஒப்பிடலாம்
உங்களுக்கு மிகவும் விருப்பமான இடத்தில் ஆதனத்தின் சராசரி விலைகளைத் தெரிந்து கொள்வது உங்களுடைய பணத்திற்குரிய பெறுமதி உங்களுக்கு கிடைப்பதனை உறுதிப்படுத்தும்.
ஒரு முதலீடாக ஆதனமானது எப்போதும் உத்தரவாதமான வருமானமாகக் காணப்படுகின்றது. நீங்கள் அதில் வாழ்ந்தாலும், அதன் பெறுமதியின் மூலம் வருமானமீட்டினாலும், கொள்வனவு செய்து வாடகைக்கு வழங்கினாலும் உங்களது ஆதனத்தின் தன்மையைப் பொறுத்து நீங்கள் பயனை அனுபவிக்கலாம். ஆகவே தான் முதலீடு செய்வதற்கு முன்னர் உங்களது வருமானத்தை கணக்கிடுமாறு பரிந்துரைக்கின்றோம்.
ரியல் எஸ்டேட் முதலீட்டாளர் முதலீட்டாளர் முதலீட்டுடன் தொடர்புடைய செலவுகளைக் கழித்த பின்னர் பெறக்கூடிய வருமானத்தின் சதவீதமாகும். வருமானங்கள் இரண்டு கூறுகளைக் கொண்டது. முதலாவது மூலதன ஆதாயம். அதாவது நீங்கள் சொத்தினை விற்கும் போது பெற்றக்கொள்கின்ற சொத்தினை வைத்திருந்த காலத்தில் ஏற்பட்ட பெறுமதி அதிகரிப்பு. மற்றையது சொத்தை வைத்திருக்கின்ற காலப்பகுதியில் பெற்றுக்கொள்கின்ற வருமானம். (வாடகை வருமானம்). ROI கணக்கிடுவதற்கு சொத்தினை வைத்திருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட காப்புறுதிக் கட்டணம், பராமரிப்புக் கட்டணம், பராமரித்தல் செலவுகள், செலுத்திய வட்டி (ஆதனத்த்pனை வங்கிக் கடனில் வாங்கியிருந்தால்) போன்றவற்றை கழித்தல் வேண்டும்.
லங்காப்ரொபட்டி வலைத்தளத்தின் ROI கல்குலேட்டர் விசேடமாக இதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், அதனைப் பயன்படுத்தி உங்களுடைய வருமானங்களை விரைவாகவும் இலகுவாகவும் பெற்றுக்கொள்ள முடியும். உங்களுக்கு கிடைக்கக்கூடிய மூலதன திரும்பல்களை கணித்தல் தொடர்பில் மேலும் தெரிந்துக் கொள்ள விரும்புவீர்களாயின் எமது பின்வரும் கட்டுரையை வாசியுங்கள். LankaPropertyWeb Tools: Learning How to Use the ROI Calculator .
சொத்து ROI ஆனது இரண்டு முக்கிய அம்சங்களில் தங்கியுள்ளது. முதலாவது குறித்த பிரதேசத்தில் காணப்படுகின்ற சொத்தின் மதிப்பு, இரண்டாவது சொத்திலிருந்து பெறக்கூடிய வருமானம். உதாரணமாக கொழும்பு 3 பகுதியில் சொத்தின் மதிப்பானது 5-6% ஆகும். அங்கு நீங்கள் கண்ணியமான ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் 3 படுக்கை அறைகள் கொண்ட ஒரு வீட்டினை வாங்குவீர்களாயின், அதன் மூலம் மாதமொன்றிற்கு ரூபா 250,000ஃ- ஐ வாடகை வருமானமாகப் பெறலாம். நீங்கள் சொத்திலிருந்து பெற்றுக்கொள்கின்ற வருமானமானது வௌ;வேறு காரணங்களின் அடிப்படையில் மாறுபடலாம். முதலீட்டிற்கு பொருத்தமான ஆதனமொன்றினை கொள்வனவு செய்வதற்கு அப்பிரதேசத்தின் சொத்தின் மதிப்பு அதிகரிப்பு விகிதத்தையும், அவ்வாதனத்தின் மூலம் பெற்றுக்கொள்ளக் கூடிய வருமானங்களையும் கருத்திற்கொள்ளுதல் சிறந்தது. சொத்தின் மதிப்பானது வளங்கள் பற்றாக்குறை, அதிக கேள்வி (higher demand), மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திகளுடன் தொடர்புடையது.
Please enter below any questions or recommendations to improve this article