எந்த ஒரு ஆதனத்திற்கும் காலப்போக்கில் புனரமைப்பு, மறுசீரமைப்பு மற்றம் பிற செலவுகளும் ஏற்படும். இவை மாறக்கூடிய செலவுகள் என அழைக்கப்படுவதோடு, ஒவ்வொரு வீட்டிற்கும் நீங்கள் செய்ய வேண்டிய புனரமைப்பு மற்றும் மறுசீரமைப்பின் தன்மை, அளவு என்பவற்றைப் பொறுத்து மாறுபடும். ஆனால் தொடர்மாடிக் குடியிருப்பில் இந்த செலவுகள் பராமரிப்புச் செலவுகள் என அழைக்கப்படுகின்றன.
தொடர்மாடியில் செய்யப்பட வேண்டிய புதுப்பித்தல்கள், கூட்டாதன முகாமைத்துவ சபையின் மூலம் கையாளப்படுகின்றன. இங்த சபை குறித்த தொடர்மாடிக் குடியிருப்பாளர்களை அங்கத்தவர்களாகக் கொண்டுள்ளதோடு, தொடர்மாடிக் கட்டடித்தின் பராமரிப்புக்காக குடியிருப்பாளர்களிடமிருந்து கட்டணம் வசு10லிக்கப்படுகின்றது. இந்தத் தொகை ஒவ்வொரு தொடர்மாடிக் குடியிருப்புகளுக்குமிடையில் வேறுபடுவதோடு, ஆண்டு தோறும் வசு10லிக்கப்படுகின்றது
கூட்டாதன முகாமைத்து சங்கம் என்பது தொடர்மாடிக் குடியிருப்பின் அனைத்து அலகு உரிமையாளர்களையும் உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு குழுவாகும். இதுவும் ஒரு அரசியலமைப்பு மற்றும் துணைச்சட்டங்களைக் கொண்டுள்ளது என்பதுடன் வணிக நிறுவனங்கள் போன்று இச்சபையும் வழக்குத் தொடரலாம். இச்சபையின் மீதும் வழக்குத் தொடரப்படலாம்.
கூட்டாதன முகாமைத்துவ அதிகாரச் சபைச் சட்டத்தின்படி இந்த சபை நிரந்தர பின்னுரிமை கொண்டுள்ளது.
கூட்டாதன முகாமைத்துவ அதிகார சபையானது கூட்டாதன முகாமைத்துவ சங்கத்தை ஒழுங்குப்படுத்துகின்றது. மேலும் குறித்த அதிகார சபையானது, கூட்டாதன முகாமைத்துவ சங்கங்கள் பின்பற்ற வேண்டிய விதிகளின் தொகுப்பையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் அடிப்படையில் கூட்டாதன முகாமைத்துவ சங்கங்களில் இருக்கக்கூடிய உரிமையாளர்களின் எண்ணிக்கை, கூட்டங்களை நடத்தும் முறை மற்றும் இன்னோரன்ன பல விதிமுறைகள் உள்ளன.
கூடட்டாதன முகாமைத்துவ சபை மற்றும் அதன் செயற்பாடுகள் தொடர்பிலான மேலதிக தகவல்களுக்கு எமது Governance of The Condominium Management Corporation: The Rights, Duties and Responsibilities. எனும் கட்டுரையை வாசியுங்கள்.
ஒரு வீடு அல்லது ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பினன் அழகு அதன் உட்புற வடிவமைப்பினில் தங்கியுள்ளது. நீங்கள் வீட்டின் உட்புறத்தை வடிவமைக்கும் விதம், அதில் உள்ளடக்கியுள்ள விதம் மற்றும் பயன்படுத்தும் விதம் போன்றன அனைத்தும் உங்கள் வீட்டினில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதனாலேயே பலர் தங்கள் ஆதனங்களை மேம்படுத்தும் போது அல்லது புதுப்பிக்கும் போது நிபுணர்களை நாடுகின்றனர்.
தற்காலத்ததில் நவீன தள திட்டங்கள் ஒரு வளர்ந்து வரும் போக்கு ஆகும். இதன் மூலம் ஒரு வீட்டிற்கு வரையறுக்கப்பட்ட இடங்கள் இல்லாமல் காற்றோட்டம் மற்றும் விசாலமான தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது. இதன் மூலம் வீட்டு உரிமையாளர்களை வௌ;வேறு வடிவடைப்பு நுட்பங்களை ஆராய்ந்து அவர்கள் விரும்பும் விதத்தில் தங்கள் வீட்டை தனித்துவமாக வைத்திருக்க உதவுகிறது. பழைய காலத்தில் இருந்த போக்குகளைப் புறந்தள்ளி, தற்காலத்தில் Minimalistic வடிவங்கள் (அதாவது குறைவானதும் அவசியமானதுமான வடிவமைப்புகள்), நடுநிலை வர்ணப்ப10ச்சுகள், அழகுபடுத்தப்பட்ட வெளிப்புற நிலப்பரப்புகள் மற்றும் நவீன சமமயலறைகள் ஆகியவை அனைவராலும் விரும்பப்படுகின்றன.
Please enter below any questions or recommendations to improve this article