ஆதனங்களை கொள்வனவு செய்வது தொடர்பான வழிகாட்டி

உங்கள் ஆதனத்தை ...


உங்கள் ஆதனத்தை வாடகைக்கு விடுவதற்கு எவ்வாறு தயார்படுத்தலாம்


வாடகைதாரருக்கு ஒரு வீட்டினை வாடகைக்கு வழங்கும் போது, அவ்வாதனம் சிறந்த முறையில் இருப்பதனை உறுதி செய்தல் வீட்டு உரிமையாளரான உங்களின் பொறுப்பாகும். ஏதேனும் சேநதங்கள் இருப்பின் அதனை சீர் செய்தல், வீட்டின் சுவர்களுக்கு மீண்டும் வர்ணம் ப10சுதல் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் அவற்றை அகற்றுதல் என்பனவற்றைச் செய்து குறித்த ஆதனம் வசிப்பதற்கான நிலையில் இருப்பதனை உறுதி செய்தல் வேண்டும்.

பொருத்தமான வாடகையாளரையும் சட்ட அம்சங்களையும் கண்டறிதல் (வாடகை - குத்தகை)


பொருத்தமான வாடகையாளர் யார் மற்றும் சிறந்த வாடகையாளர் என்ன குணங்களைக் கொண்டிருக்க வேண்டும் போன்ற விடயங்கள் ஒவ்வொரு ஆதன உரிமையாளருக்கும், அவர்களின் கொள்கைகள் மற்றும் தர அடிப்படையில் வேறுபடும். ஆயினும் பொரும் ஒரு ஆதனத்துக்கான பொருத்தமான வாடகையாளர் பின்வரும் அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும்.

  • எந்தவொரு குற்றவியல் தண்டனைக்கும் உள்ளாகாத ஒருவராக இருத்தல்.
  • பாரியளவிலான கடன்கள் ஏதும் இல்லாதவராக இருத்தல்.
  • நிலையான வருமானம் மற்றும் வேலை வாய்ப்புடையவராக இருத்தல்
  • நேர்மையானவர்
  • மரியாதைக்குரியவர்
  • நல்ல தொடர்பாளராக இருத்தல்
  • சரியான நேரத்தில் பணத்தினைச் செலுத்தியதற்கான பதிவு

அத்தகையதொரு சிறந்த வாடகையாளரை கண்டுபிடிக்க நீங்கள் உங்களுடைய யுக்தியினை கையாள வேண்டும். அதாவது நீங்கள் உங்கள் ஆதனத்தை எங்கு விளம்பரப்படுத்துகிறீர்கள், உங்கள் வாடகையாளருக்கான அளவுகோல்கள், உங்கள் வாடகையாளரை திரையிடுதல் மற்றும் தொழில்முறை புகைப்படமெடுப்பதில் முதலீடு செய்து கவர்ச்சிகரமான பட்டியல்களை உருவாக்குதல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ளுங்கள்.

பொருத்தமான வாடகையாளரை எவ்வாறு தெரிவு செய்வது மற்றும் உங்கள் வாடகையாளரை திரையிடுவது தொடர்பில் webinar with entrepreneur and investor Priyanga T. Kumarasiri மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு ஆதனத்தை வாடகைக்கு வழங்கும் போது காணி உரிமையாளருக்கும், வாடகையாளருக்கும் இடையில் ஒப்பந்தமொன்றை நிறைவேற்றும் போது, இரு தரப்பினருக்குமிடையில் சட்டச்சிக்கல்கள் ஏற்படாதவாறும், மோதல் ஏற்படாத உறவு பேணப்படுவதையும் உறுதி செய்துக் கொள்ளுங்கள். உங்கள் வாடகை ஒப்பந்தங்களை தயாரிப்பது தொடர்பிலான மேலதிக அறிவினைப் பெற்றுக் கொள்ள Attorney-at-Law Saminda Jayasekara to learn more about preparing your rental agreement என்ற எங்களது காணொளியைப் பார்வையிடுங்கள். இது தொடர்பான மேலதிக விபரங்களை அறிந்துக் கொள்ள சட்டத்தரணி கசுன் கருணாநாயக்கவுடன் எமது RealTalk பிரிவு இனை பயன்படுத்தி அறிந்துகொள்ளுங்கள்.

முதல் முறை சொந்தமாக ஒரு ஆதனத்தை வாங்குதல் சிக்கலானதாக தோன்றலாம். இந்த முழுச் செயன்முறையும் உங்களுக்கு அச்சுறுத்தலாகத் தோன்றினால், Lanka PropertyWeb இன் வாங்குபவர் மற்றும் விற்பவர் உதவித் திட்டமானது இம்முழுச் செயன்முறையின் போதும் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். இது தொடர்பில் மேலதிகமாக அறிந்து கொள்ள விரும்புவீர்களாயின் வாங்குபவர் மற்றும் விற்பவர் உதவி என்ற பக்கத்தினைப் பார்வையிடவும்.

If you would like more details or assistance with your requirements, Please CONTACT US


Please enter below any questions or recommendations to improve this article