இலங்கையில் வங்கிகடன் மூலமாகவோ அல்லது உங்களுடைய பணத்திலோ காணியொன்றினைக் கொள்வனவு செய்யும் போது சமர்ப்பிக்கவேண்டிய ஆவணங்கள் பட்டியலும், கருத்திற்கொள்ள வேண்டிய சில விடயங்களும் காணப்படுகின்றன. இவற்றைச் சமர்ப்பிப்பதன் மூலம் உங்களுடைய கடன் அங்கீகரிக்கப்படுவதனையும், காணி உங்களின் பெயரில் பதியப்படுவதனையும், உங்களுடைய காணிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் இருப்பதனையும் உறுதி செய்துகொள்ள முடியும். மேலும் இது நீங்கள் உங்கள் கட்டிடத்தை விரைவாகக் கட்டுவதற்குரிய கட்டிட வரைபடத்திற்கான அனுமதியை பெற்றுக்கொள்ள உதவியாகவிருக்கும்.
அவ்வாவணங்களாவன,
வீடு கட்டுவதற்காக காணியொன்றினை கொள்வனவு செய்வதற்கு நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பில் திலான் அனுராத, எஹல ஹோல்டிங்ஸ் பிரைவற் லிமிடெட்டின் CEO கலந்து கொள்ளும் வெபினாரின் மூலம் மேலதிகமாகத் தெரிந்துகொள்க
ஒரு ஆதனத்தை கொள்வனவு செய்யும் போது நீங்கள் ஆவணங்கள் தொடர்பிலும் மிகக் கவனமெடுத்தல் வேண்டும். ஏனென்றால் உங்களுடைய உரிமையை நிலைநாட்ட அது மிகவும் முக்கியமானதொன்றாகும். சட்டத்தரணி சஞ்சனி இடி.எஸ்.கமகே உடனான எங்களின் காணொளியினைப் பார்த்து மேலதிக விபரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.
பின்வரும் வரைபடமானது ப10ர்த்தியாகும் நிலையிலுள்ள ஒரு தொடர்மாடி குடியிருப்புத் திட்டத்தின் சான்றளிப்பு செயன்முறையாகும்.
ஒரு developer இடமிருந்து ஒரு ஆதனத்தை கொள்வனவு செய்யும்போது பெறவேண்டிய ஆவணங்கள் தெர்டர்பில் பின்வரும் வெபினாரை பார்த்து அறிந்து கொள்க webinar with Kishore D. Reddy of Platinum Realty Investments.
நீங்கள் தெரிவு செய்த ஆதனம் தொடர்பில் தேவையான விடயங்களை அறிந்து கொண்டதன் பின்னர், அடுத்ததாக ஏனைய விடயங்களைச் செய்துக் கொள்வதற்காக ஒரு அனுபவமுள்ள சட்டத்தரணியை அணுகுங்கள்.
ஏற்கனவே கட்டுமானம் நிறைவடைந்த ஒரு ஆதனத்தின் இறுதிப்பரிமாற்றமும் அதன் உரித்தும் விற்பனை உறுதியிலேயே காணப்படும். விற்பனையாளர், கொள்வனவாளரின் பெயரினை ஆதனத்தின் உரிமையாளராக காணிப்பதிவகத்தில் பதிவதற்கு விற்பனை உறுதியுடன், புதுப்;பிக்கப்பட்ட நிலஅளவைப்படத்தையும் வழங்குவார். நொத்தாரிசு உரித்து மாற்றத்தை அத்தாட்சிப்படுத்தி விற்பனையினை உறுதிப்படுத்துவார். இங்கு மூன்றாம் திறத்தவரின் தலையீடின்றி விற்பவரின் சட்டத்தரணி அல்லது வாங்குபவரின் சட்டத்தரணியே நொத்தாரிசாகவும் செயலாற்றலாம்.
விற்பனை உறுதியினை நிறைவேற்றும்போது ஒரு கொள்வனவாளரான நீங்கள் சமூகமளிக்க வேண்டிய அவசியமில்லை. விற்பனையாளரும், இரண்டு சாட்சிகளுமே நொத்தாரிசின் முன்னிலையில் கையெழுத்திட வேண்டும். உங்களுடைய முகவர் மூலமோ அல்லது சட்டத்தரணி மூலமோ விலையினைச் செலுத்துதல், மிகுதிப்பணத்தினை செலுத்துதல், தரகருக்கு பணத்தை செலுத்தல் போன்றவற்றைச் செய்விக்கலாம். இவர்களே உங்களின் பொருட்டு வீட்டின் சாவியையோ அல்லது ஆவணங்களையோ பெற்றுக்கொள்ளலாம் மற்றும் உரித்து மாற்றத்தினை காணிப்பதிவகத்தில் பதிவு செய்ததன் பின்னர், உள்ளுராட்சி சபையிலும் உரித்து மாற்றத்தினை பதியும் வேலையினை செய்யலாம். இறுதியில் உங்களுடைய உறுதி காணிப்பதிவகத்தில் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் பதிவு செய்யப்பட்ட உறுதியினை காணிப்பதிவகத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம். எவ்வாறாயினும் பிம்சவிய உரித்துப் பதிவின் கீழான உரித்து மாற்றமெனில் விற்பனையாளரும் கொள்வனவாளரும் ஒரே சமயத்தில் கையெழுத்திட வேண்டும்.
ஒவ்வொருவரும் அதிஷ்டமும், நற்விளைவுகளும் தங்களுடைய இல்லத்தில் நிறைந்திருக்க வேண்டும் என விரும்புவர். இதனையடைய பல்வேறு நபர்கள் கட்டிட நிர்மாணத்தின் போது பல்வேறு எண்ணக்கருக்கள்; மற்றும் ஏற்பாடுகள் போன்றவற்றை கருத்திற் கொள்வர்.
வாஸ்து சாஸ்திரம் வீடு நிர்மாணிக்கும் போது பின்பற்றப்படுகின்ற அவ்வாறானதொரு எண்ணக்கருவாகும். Feng Shui என்பது உங்கள் வீட்டினில் எந்நேரத்திலும் பிரயோகிக்கக்கூடிய நடைமுறைகளையும், கொள்கைகளையும் கொண்டமைந்ததாகும். வாஸ்து சாஸ்திரத்தின் ப10ர்வீகம் இந்தியா என்பதுடன் அது கட்டிட விஞ்ஞானமாகக் கருதப்படுகின்றது. மேலும் பலர் வாஸ்து சாஸ்திரத்தை 1500 ஆண்டு கால ப10ர்வீகமுடைய Feng Shui இன் இந்திய வடிவமாகக் கருதுகின்றனர். இது Nஐhதிடம் மற்றும் நற்திசைகள் என்பவற்றை உள்ளடக்கிய ஒரு எண்ணக்கரு ஆகும்.
Feng Shui ஆனது வாஸ்து சாஸ்திரத்தைப் போன்று சீனாவில் தோன்றிய எண்ணக்கரு எனவும், அதுவும் நேர்மறையான விளைவுகள், நல்லதிர்ஷ்டம் மற்று நற்விளைவுகளை கொண்டுவருவதாகக் கருதப்படுகின்றது. எவ்வாறாயினும் அது வாஸ்து சாஸ்திரத்தை போலல்லாது ஒரு தனி நபரையும் அவரைச் சுற்றியுள்ள சு10ழலிலுள்ள ஆற்றல் வாய்ந்த சக்திகளை ஒன்றினைக்கின்ற கருத்தினை அடிப்படையாகக் கொண்டது. இது நல்லிணக்கத்தையும் சமநிலையையும் அடைவதற்கான ஒரு நோக்கமாகக் கருதப்படுகின்றது.
மேற்குறிப்பிட்ட இரு எண்ணக்கருக்களுக்கும் அமைவாக, நீங்கள் உங்களது வீட்டிற்கு பயன்படுத்தும் வர்ணப்ப10ச்சு, தளபாடங்கள் மற்றும் பொருத்துதல்கள் உள்ளடங்கலாக ஒவ்வொரு சிறிய விடயங்களும வீட்டினுள்ளே நேர்மறையான சக்தியினை ஏற்படுத்துவதுடன், வீட்டிலுள்ள நபர்களின் உறவுகளையும் பலப்படுத்துவதாகவும் அமையும்.
நேர்மறை விளைவுகளை மேம்படுத்துவதற்காக வாஸ்துசாஸ்திரமும், Feng Shui உம் பரிந்துரைக்கப்பட்ட இரண்டு வௌ;வேறான நடைமுறைகள் ஆகும். உங்களது வீட்டிற்கு நேர்மறையான விளைவுகள், நல்லதிர்ஷ்டம் மற்றும் நற்விளைவுகளை என்ன செய்யவேண்டும் என்பது பற்றிய மேலதிக விடயங்களைத் அறிந்துக் கொள்ள வாஸ்து மற்றும் ஃபெங் சுய்: உங்கள் வீட்டில் செல்வம் மற்றும் செழிப்பை அதிகரிக்க 9 வழிகள் எனும் எமது கட்டுரையை வாசியுங்கள்.
ஒரு உறுதியானது ஆதனமொன்றிற்கு உரித்து ஃ உரிமைஃ உடமையினை வழங்குகின்ற ஒரு சட்டரீதியான ஆவணமாகும். உறுதியின் வடிவங்கள் குறித்த உரித்து ஃ உரிமைஃ உடமை எந்த முறைமையில் மாற்றப்படுகின்றது என்பதைப் பொறுத்து வேறுபடும்.
ஒரு உறுதியானது ஒரு நபரிடமிருந்து இன்னொரு நபரிற்கு மாற்றம் செய்யப்படும் போது இவ்வகையான உறுதி எழுதப்படும். விற்பனையாளரதும் கொள்வனவாளரதும் பெயர், முகவரி மற்றும் அடையாள அட்டை இலக்கங்கள், விற்பனையாளருக்கு உரித்தினை வழங்கிய முன்னைய உறுதியின் விபரங்கள், விற்பனைப் பெறுமதி என்பன இவ்வாவணத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் விடயங்களாகும். விற்பனையாளர், இரு சாட்சிகளின் முன்னிலையிலும், நொத்தாரிசின் முன்னிலையிலும் கையெழுத்திட்டதன் பின்னர், சாட்சிகளும் கையெழுத்திட்டதன் பின்னர் நொத்தாரிசு தனது கையொப்பத்தினையும் இட்டு அத்தாட்சிப்படுத்தியவுடன், கொள்வனவாளருக்கு ஆதனத்தின் உரிமை சென்றடையும்.
ஒரு ஆதனத்தின் உரித்தினை இன்னுமொருவருக்கு பணப்பெறுமதியின்றி கைமாற்றம் செய்யும் போது இவ்வகை உறுதி பயன்படுத்தப்படும். இவ்வுறுதியானது சீவிய உரித்துடனோ அல்லது இல்லாமலோ அல்லது கைமீட்டுக்கொள்ளும் உரித்துடனோ அல்லது இல்லாமலோ தயாரிக்கப்படும்.
கைமாற்றல் உறுதி என்பது திறத்தவர்களுக்கிடையில் தங்களது ஆதனத்தினை கைமாற்றிக்கொள்ளும் நோக்கில், ஆதனத்தின் உரிமையாளர்களுக்கிடையில் நிறைவேற்றப்படும் ஒரு உறுதியாகும். இது வழக்கமான சொத்து விற்பனையிலிருந்து வேறுபட்டதாகும். ஏனெனில் இங்கு திறத்தவர்களுக்கிடையில் பணம் பரிமாற்றப்படாது.
ஒரு ஆதனத்தின் உரித்துரிமைகளை சட்டரீதியாக பிரகடனப்படுத்துவதற்கு அல்லது கோருவதற்காக நிறைவேற்றப்படும் உறுதியாகும். இவ்வுறுதியினை நிறைவேற்றுவதன் நோக்கமானது, குறித்த நபர் குறித்த ஆதனத்தின் இடைய10ரற்றதும், தொடர்ச்சியானதுமான உடமையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கின்றார் என்பதனால் அவர் குறித்த உடமையில் ஆட்சியுரிமையை கொண்டுள்ளார் என்பதனை வெளிப்படுத்துவதற்காகும். இங்கு குறித்த ஆதனத்தின் உடமை பிரகடனப்படுத்துபவரிடம் காணப்படுகின்றமையை உறுதிப்படுத்திக் கொள்வது நொத்தாரிசிற்கு நடைமுறையில் சாத்தியமற்றதாகும். ஆகவே, முன்னெச்சரிக்கையாக இவ்வகையுறுதியை நிறைவேற்ற முன்னர், ஆதனத்தின் உடமைக் காலத்தினை குறிப்பிட்டு பிரகடனப்படுத்துபவரிடமிருந்து சத்தியக்கடதாசியினை பெற்றுக்கொள்ள நொத்தாரிசுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஒருவர் இறுதிவிருப்பாவணம் எதுவுமின்றி இறந்தாலும் பிரகடனப்படுத்தல் உறுதியினை நிறைவேற்றலாம். இங்கு ஆதனத்தின் உரிமை யாருக்கு சென்றடைய வேண்டுமோ, அவர்கள் உரிமையைக் கோரி உறுதியை நிறைவேற்றலாம் அல்லது பயன்பாட்டாளர்கள் என்ற வகையில் தங்களது உரிமையை வெளிப்படுத்தி பிரகடனப்படுத்தல் உறுதியை நிறைவேற்றலாம்.
1979 ஆம் ஆண்டு 43 ஆம் இலக்க நில மானியங்கள் (சிறப்புச் ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் நாட்டின் ஜனாதிபதிக்கு இலங்கையின் குடியுரிமையாளர் ஒருவருக்;கு ஏதேனும் காணியொன்றினை வழங்குவதற்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.
ஒருவர் இறந்த பின்னர் அவரது சொத்துக்கள் எவ்வாறு சென்றடைய வேண்டும் என்பதை குறித்து அந்நபரினால் நிறைவேற்றப்படும் பிரகடனமே இறுதி விருப்பாவணம் ஆகும். இவ்வாவணமானது இறப்பின் பின்னரான வழியுரிமை தொடர்பிலான அனைத்துச் சட்டங்களுக்கும் மேலாக செயற்படும்.
இது இறுதிவிருப்பாவணத்தின் இணைப்பு ஆவணமாக கருதப்படும். இது இறுதிவிருப்பாவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை திருத்துவதாகவோ, அல்லது இறுதிவிருப்பாவணத்தில் ஏதேனும் மேலதிக விடயங்களையும் சேர்ப்பதற்காகவோ நிறைவேற்றப்படும்.
உறுதிகள் தொடர்பில் மேலும் அறிந்து கொள்வதற்கு உறுதிகள் தொடர்பாக இலங்கையில் செயல்களின் வகைகள் (…….) என்ற எமது கட்டுரையை வாசியுங்கள்
எவ்வகையான தொழிலிலும் மோசடி தவிர்க்கப்பட முடியாத ஒன்றாக உள்ளது. இலங்கையில் ரியல் எஸ்டேட் துறையில் மோசடி அதிகளவில் உள்ளது. வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் இத் தொழிற்துறையில் போதிய தகவல் மற்றும் அது தொடர்பிலான தகவல் கிடைக்கப்பெறாமையே அதற்குரிய காரணங்களாகும்.
ரியல் எஸ்டேட் மோசடியானது பல்வேறு நிலைகளில் இடம்பெறுகின்றது. சிறிய அழைப்பொன்றிலிருந்து ஆரம்பித்து போலி பண மாற்றம், உறுதிகளில் பெயர் மாற்றம் மற்றும் போலி உறுதிகளை உருவாக்குதல் வரையிலான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. இவ்வாறான மோசடிகளிலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ள வங்கிக்டன் மூலம் அல்லது நம்பிக்கையான ரியல் எஸ்டேட் முகவர் மூலம் அல்லது சட்டத்தரணி ஒருவரது உதவியைப் பெறுவதன் மூலம் சொத்துக்களை வாங்க முனைய வேண்டும்.
சொத்து மோசடிகள் தொடர்பாகவும், அவற்றிலிருந்து தவிர்ந்து கொள்வது எவ்வாறு என்பதனையும் பற்றி மேலதிகமாக தெரிந்து கொள்ள சொத்து மோசடிகளில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் மற்றும் அவற்றை எவ்வாறு தவிர்ப்பது என்ற எமது கட்டுரையை வாசியுங்கள்.
சொத்து மதிப்பீடானது, ஆதனத்தின் அமைவிடம், அதன் நிலைமை மற்றும் பிறகாரணிகளை அடிப்படையாகக் கொண்டு, ஆதனத்தின் விலையினை மதிப்பிடுவதற்கு உதவி புரிகின்றது. இம்மதிப்பீடானது தொழில்முறை நில மதிப்பீட்டாளரினால் மேற்கொள்ளப்படுவதோடு, நீங்கள் எதிர்காலத்தில் இவ்வாதனத்தினை விற்கும் எண்ணத்தினைக் கொண்டிருந்தால் அவரால் தரப்படும் அறிக்கை அச்சந்தர்ப்பத்தில் விலையைத் தீPர்மானிப்பதற்கு உங்களுக்கு உதவியாக இருக்கும். மேலும் மதிப்பிடானது, பங்குதாரரிடமிருந்து உங்கள் சொத்தினைப் பிரிக்கும்போது அதன் பணப்பெறுமானத்தை தீர்மானிக்க உதவும்.
எவ்வாறாயினும் மதிப்பீடு தொடர்பில் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது:
சிறந்த சொத்து மதிப்பீட்டினை மேற்கொள்ள டுயமெயீசழிநசவலறுநடி மூலம் விற்போர், வாங்குவோருக்கான உதவி சேவை செயன்முறையினை நாடவும்.
வாங்குபவர் மற்றும் விற்பவர் உதவி சேவை ஆனது முதன்முறையாக வீடு வாங்குபவர்கள், விற்பவர்கள், மற்றும் நிலஉரிமையாளர்களின், சொத்து வாங்குதல், விற்றல் மற்றும் குத்தகைக்கு வழங்கல் போன்ற செயற்பாடுகளை இலகுவாக்கும் பொருட்டு LankaPropertyWeb இனால் ஆரம்பிக்கப்பட்டது. இச்சேவை மையமானது தொழில்முறை நிலஅளவையாளர்கள் மூலம் சொத்து மதிப்பீடு செய்தல், சட்டத்தரணிகளின் சட்ட உதவி, ஆவணங்களைத் தயார்படுத்தி சமர்ப்பிக்க உதவுதல் (உறுதி அல்லது குத்தகை ஒப்பந்தங்கள்), ஈடு தொடர்பான அறிவுரைகள், வரிக் கட்டணங்கள், சந்தைப்படுத்தல் அறிவுரைகள், தனிப்பட்ட உதவிகள் மற்றும் ஏனைய நகர்த்தல் சேவைகள், காப்புறுதி மற்றும் புகைப்படமெடுத்தல் போன்ற சேவைகளை வழங்குகின்றது.
எமது சிறப்புத் தேர்ச்சி பெற்றோரின் சேவைகள் மூலமாக சொத்துக்களை விற்றல் மற்றும் வாங்குதலில் ஏற்படும் தொந்தரவுகளிலிருந்து விடுபட்டு இலகுவாக சொத்து பரிமாற்றத்தினை செய்வதன் மூலம் உங்கள் நேரத்தையும் மீதப்படுத்திக் கொள்ளலாம். இதனை அழுத்துவதன் மூலம் எம்மைத் தொடர்பு கொள்க
Please enter below any questions or recommendations to improve this article