ஆதனங்களை கொள்வனவு செய்வது தொடர்பான வழிகாட்டி

ஆதனமொன்றினை


சொத்தொன்றை கொள்வனவு செய்வதுடன் தொடர்புடைய கிரயங்கள்


சட்ட செலவுகள்

சொத்தொன்றை கொள்வனவு செய்வது தொடர்பாக உள்ள சட்ட தேவைப்பாடுகள் பற்றிய உதவியை தொழிலில் உள்ள சட்டத்தரணிகள் அல்லது முகவரினால், வாங்குபவர் மற்றும் விற்பவருக்கு வழங்கப்படுகின்றது. ஒரு கொள்வனவாளராக நம்பிக்கையான ஒரு சட்டத்தரணியுடன் பணியாற்றுவது என்பது போலியான விற்பனையாளரால் நீங்கள் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்பை குறைக்கும். ஆனால் ஒரு சட்டத்தரணியை தெரிவு செய்கையில் அவரது அனுபவம் மற்றும் விஷேடத்துவம் தொடர்பில் கவனம் செலுத்துவது மிக முக்கியமாகும். அல்லது உங்களுடைய நம்பிக்கைக்குரிய குடும்ப அங்கத்தவர்கள், நண்பர்களிடம் ஆலோசனை பெறலாம்.

ஆரம்பத்திலேயே சட்டத்தரணியின் உதவியை நாடுவதன் மூலம் கீழ்வரும் உதவிகள் இலகுபடுத்தப்படும்:

  • ஆவணங்களை தயார்ப்படுத்தல்
  • சொத்தின் உரித்து தொடர்பான தேடலுக்கு உதவுதல்
  • உரித்து உறுதி மற்றும் ஏனைய ஆவணங்களை தயாரித்தல்
  • குடியிருப்பு விஸா விண்ணப்படிவம் தொடர்பான விடயங்களுக்கு உதவுதல்
  • கொள்வனவு, விற்பனை ஒப்பந்த பேச்சு வார்த்தைக்கு உதவுதல்
  • வெளிநாட்டவராக இருந்தால் சட்ட நிலுவைகளை தீர்த்து வைத்தல்
  • தேவைப்படின் கம்பனி பதிவு செய்தல்
  • தேவைப்படின் கொடுக்கல் வாங்கலுக்காக கம்பனிக்கான வங்கிக்கணக்கை ஆரம்பித்தல்
  • இன்னொருவரை நீர் நியமிக்க விரும்பின் அதற்காக அற்றோனித் தத்துவப்பத்திரத்தை தயாரித்தல்.

இலங்கையில் ஒரு சொத்தை கொள்வனவு செய்யும் போது நீங்கள் செலுத்தும் மூலதன தொகைக்கு மேலதிகமாக முத்திரை கட்டணம், வங்கிக்கட்டணம், சட்டத்தரணிக்கான கட்டணம் என்பவற்றையும் செலுத்த வேண்டும். இந்த கட்டணங்கள் சொத்தின் அடிப்படையில், உங்கள் சட்டத்தரணி, மற்றும் சொத்து கொள்வனவா குத்தகையா என்பதினடிப்படையிலும் வேறுபடும்.

கொள்வனவு அல்லது குத்தகை ஒப்பந்த ஆவண தயாரிப்பிற்கு சுட்டத்தரணியொருவர் சாதாரணமாக 1மூ - 3மூ தொகை அறவிடுவார்.

முத்திரை கட்டணம்.

ஒரு சொத்து விற்பனை செய்யப்படும் போது அதன் பெறுமதியின் முதல் ரூ. 100,000 இற்கு 3மூ மற்றும் மேலதிக பெறுமானத்திற்கு 4மூ முத்திரைக்கட்டணம் அறவிடப்படும். குத்தகையில் 1மூ முத்திரைக்கட்டணம் அறவிடப்படும் அதேவேளை, குத்தகையானது 20 வருடங்களுக்கு மேல் காணப்படுமாயின் முதல் 20 வருடங்களுக்கு மாத்திரமே முத்திரைக்கட்டணம் அறவிடப்படும். பெறுமதியில் 1மூ - 3மூ தொகை சட்டத்தரணியின் கட்டணமாக அமைவதோடு அதை வாங்குபவர் ஃ குத்தகைக்கு எடுப்பவரால் வழங்க வேண்டும்.

வங்கி கட்டணங்கள்

அடகுக்கடன் மூலம் வாங்கப்பட்ட சொத்து வேறுபட்ட வங்கிக்கொள்கைகளுக்கேற்ப வட்டி மற்றும் வேறுபட்ட செலவுகளுக்கான வங்கிக்கட்டணங்களுக்கு உட்பட்டது. பொதுவாக அடகுக்கடனுக்கான வட்டி விகிதம் 7மூ முதல் 12.5மூ வரை காணப்படுவதோடு, இது 5 தொடக்கம் 30 வருடங்களுள் திரும்ப செலுத்த கூடியதாக இருக்கும். திரும்ப செலுத்துவதற்கான இயலுமை, வயது மற்றும் பிற விடயங்களை கருத்திற்கொண்டு வங்கியினால் இது தீர்மானிக்கப்படும்.

  • விலைகளை மதிப்பிட்டு உண்மையான பெறுமதியை அறிந்து கொள்ளுதல்.

எந்த பிரதேசத்திலும் காணிகள் காணப்படலாம். ஆனால் அனைவரும் ஒரே விலையையோ, உண்மையான விலையையோ வெளிப்படுத்துவதில்லை. இலங்கையில் காணி கொடுக்கல் வாங்கல் செயன்முறையில் தகவல்கள் வரையறுக்கப்பட்தாக காணப்படுகின்றது. இதனால், நீங்கள் காணிக்காக செலுத்தும் தொகை உண்மையில் அதற்குரிய பெறுமதி கொண்டதா, அல்லது சாதாரண சந்தைப் பெறுமதியை கொண்டதா என்பதை நீங்கள் அறிய வாய்ப்பில்லை.

உங்கள் வரவுக்குள்ளான அளவுகோலை உருவாக்கி, சராசரி சொத்து விலைகள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள இலங்கை வீட்டு விலைச்சுட்டெண் பெரிதும் உதவும். இப்பக்கமானது அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள், நிலங்கள் மற்றும் வணிக கட்டிடங்கள் உள்ளிட்ட சொத்துக்களின் சராசரி விலைகளை பற்றிய தகவல்களை உள்ளடக்கியுள்ளது. இது ஒரு காலாண்டு, பகுதி மற்றும் நகரங்களின் அடிப்படையில் தகவல்களை வழங்குகின்றது.

விற்பனை மற்றும் கொள்முதல் ஒப்பந்தத்துடன் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பை முன்பதிவு செய்தல்

தொடர்மாடிக் குடியிருப்பொன்றினைக் கொள்வனவு செய்யும் போது விற்பனை மற்றும் கொள்முதல் ஒப்பந்தத்தில் நீங்கள் கையொப்பமிடுவது விற்பனையாளரிடமிருந்து அச்சொத்தை நீங்கள் கொள்வனவு செய்வதாக குறிக்கப்படுகின்றது. பின்னர் மூன்றாம் தரப்பினரால் அந்த ஒப்பந்த்தில் கையொப்பமிட முடியாது.

இவ்வுடன்படிக்கையின் உள்ளடக்கம்:

  • விலை
  • கொடுப்பனவு அட்டவைணை (முற்பணம் உள்ளடங்களாக)
  • விற்பவர் மற்றும் வாங்குபவரின் கடப்பாடுகள்
  • முற்பணம் தொடர்பான விதிமுறைகள் மற்றும் கடப்பாடுகள்.

உடன்படிக்கை எப்போது முடிவுறுத்தப்படும், முடிவுறுத்தலுக்கான காரணங்கள், தண்டனைகள் போன்ற விடயங்களும் விற்பனை மற்றும் கொள்முதல் உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். தற்போது விற்பனையாளரின் சட்டத்தரணி ஆவணங்களை தயாரித்து வாங்குபவருக்கு இலவசமாக வழங்குகிறார். பொதுவாக வாங்குபவர் விற்பவரின் சட்டத்தரணிக்கு உடன்படிக்கையில் கையொப்பமிடும் போது முற்பணத்தை செலுத்துவார்.

சட்ட பூர்வ ஆவணங்கள் அனைத்தும் தயார்படுத்தப்பட்டு கட்டணங்களும் செலுத்தப்பட்ட பின்னரே ஒரு சொத்தின் விற்பனை முடிவுறும். இதில் உரிமைப்பத்திரங்கள், உரித்து வரலாறு, வீதிக்கோட்டு சான்றிதழ், இணக்க சான்றிதழ்கள் மற்றும் செலுத்திய வரிகள் மற்றும் உள்ளுர் கட்டணங்களை காட்டுவதற்கான ஆவணங்கள் ஆகியவை உள்ளடங்கும். இந்த ஆவணங்கள் ஒவ்வொன்றினதும் செல்லுபடியாகும்தன்மை ஒரு சட்டத்தரணியினால் சரிபார்த்து உறுதி செய்யப்படல் வேண்டும்.

விற்பனை உறுதி மூலம் உரிமையின் இறுதி பரிமாற்றம் இடம்பெறும். விற்பனையாளரின் சட்டத்தரணி இவ்வாவணத்தை தயாரித்து வாங்குபவருக்கு இலவசமாக வழங்குகின்றார். விற்பனையாளர் புதுப்பிக்கப்பட்ட நிலஅளவைப்படத்துடன் வாங்குபவரின் பெயருக்கே சொத்தை மாற்றுவதற்காக காணிப்பதிவகத்தில் பதிவு செய்வார். ஒரு பொது நொத்தாரிசும் விற்பனையை உறுதி செய்ய வேண்டும். விற்பவர் அல்லது வாங்குபவரின் சட்டத்தரணியும் பொது நொத்தாரிசாக செயற்பட முடியும்.

நீங்கள் வாங்குபவராக இருக்கும் பட்சத்தில் விற்பனை உறுதியில் கையொப்பமிடும் போது இருக்க வேண்டிய அவசியமில்லை. வ8pற்பவர் மற்றும் இரண்டு சாட்சிகள் சட்டத்தரணி முன்னிலையில் கையொப்பமிடுவதோடு, உங்கள் முகவர் அல்லது சட்டத்தரணி மிகுதி கட்டணங்களை நிறைவேற்றுவர். அவர் ஆதனத்தின் சாவியை உங்கள் சார்பாக பெறுவதோடு, விற்பனை உறுதியை பதிவு செய்து உள்ளுர் அதிகாரசபையில் சொத்துரிமையை உங்கள் பெயரில் மாற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பார். விற்பனை உறுதி பதிவு செய்யப்பட்ட பின்னர் பதிவு செய்யப்பட்ட

உறுதியை நீங்கள் காணிப்பதிவகத்திலிருந்து பெறுவீர்கள். எவ்வாறாயினும், பிம்சவிய உறுதிப்பரிமாற்றத்தின் போது விற்பவரும் வாங்குபவரும் கையொப்பமிடுமிடத்தில் இருக்க வேண்டும்.

அளவைப்படத்திற்கான அனுமதியை பெற்றுக்கொள்ளல்

கட்டட அமைப்புக்களானவை கட்டிட அளவைப்படத்தினை மீறியதாக அமையக்கூடாது. இல்லாவிடின் உள்ளுர் அதிகாரசபை உங்கள் கட்டிடத்தை அனுமதிக்க மறுத்து, அது ஒரு அனுமதியளிக்கப்படாத கட்டிடமாக மாறலாம்.

கட்டிடத்துக்கான அனுமதியை பெறுவது தொடர்பாக மற்றும் கட்டிடங்ளுக்காக கடைபிடிக்க வேண்டிய விடயங்களை 8 Things to Follow to Get Your House Plan Approved by the Municipal Council எனும் எமது ஆக்கத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

உங்களுக்கான சரியான வீடு கட்டுபவரை இனங்காணல்

இலங்கையில் உங்களது கனவு இல்லத்தை கட்டுவதற்கு நீங்கள் வீட்டுத்திட்டத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை வழங்கப்படும் சேவைகளை பொறுத்து தனிப்பட்ட ஒப்பந்தக்காரர்கள் அல்லது மதிப்புக்குரிய வீடு கட்டுனர் போன்றோரை தெரிவு செய்யலாம்.

தொழிலில் அவர்களுக்குள்ள அனுபவத்தின் அடிப்படையில் இந்த கட்டுனர்களினால் வழங்கப்படும் சேவைகளும் லித்தியாசப்படுகின்றன. கட்டுமான செயல் திட்டம் ஒன்றுக்கு ஒருவரை தெரிவு செய்யும் போது நீங்கள் செலவு செய்ய தயாராகவுள்ள கிரயம், நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் நேரம், வடிவமைப்பின் சிக்கல் தன்மை, உங்கள் சொத்து அமைந்துள்;ள இடம், கட்டுனர்களால் முன்னர் மேற்கொள்ளப்பட்ட செயல்திட்டங்களின் தரம் மற்றும் ஒட்டுமொத்த வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில் செல்வாக்கு செலுத்தும் ஏனைய விடயங்கள் போன்றவற்றை கருத்திற்கொள்ள நாங்கள் உங்களுக்கு பரிந்துரைக்கின்றோம்.

கிரய வினைத்திறனான வீட்டை எவ்வாறு உருவாக்குவது

இலங்கையில் ஏற்கனவே கட்டப்பட்ட சொத்தொன்றை கொள்வனவு செய்யும் போது தேவைக்கு ஏற்பு அறைகளை அமைத்துக்கொள்வதில் பாரிய வரையறை காணப்படுகின்றது. தளபாடங்களை மறுசீரமைக்கவும் வடிவத்தை மாற்றவும் உங்களால் முடியுமாக இருந்தாலும் தளவடிவமைப்பு மற்றும் வீட்டின் சிறப்பம்சங்களை மாற்ற முடியாது. எவ்வாறாயினும் உங்கள் சொந்த வீட்டை நீங்களே கட்டும் போது உங்களுக்கு தேவையான விடயங்களை எவ்வாறு எங்கே உள்ளடக்க வேண்டும் என்பதனை முடிவு செய்து உள்ளடக்கலாம்.

இலங்கையில் கிரய வினைத்திறனான வீட்டை கட்ட 3 விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும்:

  • சரியான நிலத்தை தேர்ந்தெடுத்தல்
  • வீட்டை திறமையாக வடிவமைத்தல்
  • கட்டுமான செலவுகளை திறம்பட விநியோகித்தல்

இம்மூன்று விடயங்களை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்பதை எமது வெபினாரை பார்வையிடுவதன் மூலம் அறிந்து கொள்ளுங்கள். (How to Build a Cost Effective House with Chinthaka Dayaratna Managing Director of C Plus Design (Pvt) Ltd.)

மூலதன ஆதாய வரி

உள்நாட்டு இறைவரித் திணைக்களமானது 01.04.2018 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வண்ணம் முதலீட்டு சொத்துக்களின் தேறுகையிலிருந்து ஈட்டப்படுகின்ற இலாபத்தின் மூலதன ஆதாய வரியினை (ஊபுவு) அறிமுகப்படுத்தியது. இதனடிப்படையில் முதலீட்டுச் சொத்துக்களின் (உதாரணம் காணி) தேறுகையிலிருந்து 10மூ வரி விதிக்கப்படும். மூலதன ஆதாய வரியானது குறித்த பணம் பெறப்பட்ட தினத்திலிருந்து 30 நாட்களுக்குள் செலுத்தப்பட வேண்டும். மூலதன ஆதாய வரியினை கணக்கிடும் போது பெறப்பட்ட பணப்பெறுமதியிலிருந்து, கொள்வனவுச் செலவு, கையாளுதலுக்கான செலவு, சட்டச் செலவு, ஏற்கனவே செலுத்தப்பட்ட மூலதன ஆதாய வரி, தரகுக்கான செலவு மற்றும் இன்னோரன்ன செலவுகள் என்பன கழிக்கப்பட வேண்டும். யாதேனும் காணி அல்லது கட்டிடம் 01.04.2018 ஆந் திகதிக்கு மன்னர் வாங்கப்பட்டிருக்குமாயின் அல்லது கொடையாகக் கிடைக்கப் பெற்றிருக்குமாயின் அக்காணியின் கிரயம் 30.09.2017 திகதியிலுள்ள பெறுமதியினை உள்ளடக்கும்.

இருப்பினும் பின்வரும் விதிவிலக்குகளும் பிரயோகிக்கப்படும்.

  • மூலதன ஆதாயமானது பரிவர்த்தனையை விட மாதத்திற்கு ரூ.50,000 அல்லது ஆண்டுக்கு ரூ.600,000 இற்கு குறைவாக இருந்தால் மூலதன ஆதாய வரி பொருந்தாது
  • ஒரு தனிநபர் தனது பிரதான வதிவிடத்தை விற்கும் போது, அந்த ஆதனத்தில் மூன்று ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியான சொந்தமாகவிருந்து, அக்காலப்பகுதியில் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து வசிப்பதற்கு பயன்படுத்தப்பட்டிருந்தால் அவர் மூலதன ஆதாய வரிக்கு உட்படமாட்டார்.
  • மூலதன ஆதாய வரியானது வாழ்க்கைத்துணைவர்கள் மற்றும் முன்னால் வாழ்க்கைத்துணைவர்களுக்கிடையிலான கொடைகள் மற்றும் விற்பனைகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட அறுதிகள் மற்றும் வாகனங்கள் போன்றவற்றுக்குப் பொருந்தாது.

இவ்விடயம் தொடர்பில் மேலும் அறிந்துகொள்ள எமது Capital Gains Tax in Sri Lanka and its effect on property என்ற கட்டுரையை வாசியுங்கள்

வெளிநாட்டவராக இருந்து கொண்டு இலங்கையில் சொத்துக்களை வாங்குதல்.

இலங்கைச் சட்டத்தின்படி, வெளிநாட்டவர்கள் நாட்டினில் காணிகளை கொள்வனவு செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும் காணிகளை 99 ஆண்டு கால குத்தகைக்கு பெற்றுக்கொள்ள முடியும். மேலும் வெளிநாட்டவர்கள்; இலங்கையில் காணியொன்றினை கொள்வனவு செய்வதாக இருந்தால், இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்ட கம்பனியயின் மூலமே வாங்க முடியும் என்பதுடன், குறித்த கம்பனியின் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட வங்கிக்கணக்கிலிருந்தே பணம் செலுத்தப்பட வேண்டும்.

இதற்காக தினசரி வாழ்க்கை நிதியினைப் பராமரிக்கவும், ஆதனத்தினை வாங்குவதற்கான பணத்தினை செலுத்தவும் இலங்கையில் வங்கிக் கணக்குகளைத் திறக்க வேண்டும். ஒரு கம்பனியின் மூலம் சொத்துக்களை கொள்வனவு செய்வதாயின் அக்கம்பனியின் பெயரில் வங்கிக் கணக்கொன்றினைத் திறத்தல் வேண்டும். இச்செயன்முறையானது வெளிநாட்டவர்களின் சொத்துக்களை வெறுமனே கொள்வனவாக அல்லாமல் முதலீடாக அடையாளப்படுத்துகிறது.

உள்நோக்கிய முதலீட்டுக் கணக்கு inward investment account (IIA) என்பது உள்நாட்டு வணிக வங்கிகளினால் ஆதன முதலீடுகளுக்காக உருவாக்கப்பட்ட ஒரு விசேட வங்கிக்கணக்காகும். இந்தக் கணக்குகளினூடாக உங்களது ஆதன பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது வெளிநாடுகளுக்கு பணத்தினை அனுப்புவது இலகுவானதாக இருக்கும்.

ஒரு ஐஐயு ஐ அமைக்க

  • இலங்கையில் உள்ள உள்நாட்டு வங்கிகளில் USD மற்றும் LKR கணக்குகளைத் திறக்கவும்
  • உங்களின் புதிய IIA கணக்கிற்கு நிதியை மாற்றவும்
  • ஆதனத்தினை கொள்வனவு செய்வதற்குரிய நிதியை குறித்த கணக்கிலிருந்து விற்பனையாளருக்கு மாற்றுவதன் மூலம் செலுத்தவும்.
  • நீங்கள் ஆதனத்தினை வாங்கியதற்கான அதிகாரப10ர்வ ஆவணத்தினை வங்கிக்கு சமர்ப்பிக்கவும் (உதாரணம் விற்பனைப் பற்றுச்சீட்டு). நீங்கள் அவ்வாதனத்தை விற்று பணத்தை இலங்கையிலிருந்து திருப்பி அனுப்ப முடிவு செய்தால் அவை உங்களுக்குத் தேவைப்படும்.

ஆனால் நீங்கள் ஒரு தொடர்மாடிக் குடியிருப்பை வாங்குகிறீர்கள் என்றால், அதற்கு சில விதிவிலக்குகள் உள்ளன. அரசாங்கத்தினால் சட்டத்தில் மாற்றம் செய்யப்படுவதற்கு முன்னர் தொடர்மாடிக் குடியிருப்பில் மூன்றாவது மாடிக்கு மேலுள்ள குடியிருப்புகளையே வெளிநாட்டவர்கள் வாங்குவதற்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அண்மையில் சட்டத்தினில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களுக்கு அமைய வெளிநாட்டினர் நாட்டின் எந்தப் பகுதியிலும் அமைந்த தொடர்மாடியில் எந்தத் தளத்திலும் குடியிருப்புகளை விலைக்கு வாங்கலாம் என்ற சட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது.

இவ்விடயம் தொடர்பில் மேலும் அறிந்துகொள்ள எமது guide to buying property in Sri Lanka for foreigners and expats என்ற கட்டுரையை வாசியுங்கள்.

If you would like more details or assistance with your requirements, Please CONTACT US


Please enter below any questions or recommendations to improve this article