ஆதனங்களை கொள்வனவு செய்வது தொடர்பான வழிகாட்டி

கொள்வனவிற்கான நிதி


சிறப்பான வீட்டுக்கடனை பெற்றுக்கொள்ளுங்கள்

உங்கள் கனவு இல்லத்தை வாங்குவதற்கு போதிய நிதி உங்களிடம் இல்லையெனில் வீட்டுக்கடனொன்றுக்கு விண்ணப்பிப்பதே சிறந்த வழியாகும். அதுவே மோசடிகளில் இருந்து பாதுகாப்பு பெற சிறந்த வழியாகும். இதற்காக உள்நாட்டு வணிக வங்கிகள் வேறுபட்ட வீட்டு கடன் திட்டங்களை முன்வைத்துள்ளது. திரும்ப செலுத்தும் காலம், திருப்பி செலுத்துவதற்கான நிபந்தனைகள், தொழில், மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில் இவை நிர்ணயிக்கப்பட்டுள்ளன. உங்களுக்கான சிறந்த வீட்டுக்கடன் திட்டத்தை தெரிவு செய்து கொள்ளலாம். பொதுவான வீட்டுக்கடன் கணிப்பினை கொண்டு உங்கள் மாதாந்த திரும்ப செலுத்தும் தொகையை அறிந்து கொள்ளலாம்.

வீட்டுக்கடனை பெற்றுக்கொள்வது எவ்வாறு?

இலங்கையில் வீட்டுக்கடன் திட்டமானது பல வணிக வங்கிகளாலும், நிதி நிறுவனங்களாலும் வழங்கப்படுகின்றது. மற்ற வங்கிகள் கடனை வழங்க ஒரு வாரம் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் எடுக்கையில் சில வங்கிகள் வெறும் 3 நாட்களில் கடனை வழங்குகின்றது. இருப்பினும் கடனினை தெரிவு செய்யும் போது வட்டி விகிதங்கள், மாதாந்த திரும்ப செலுத்தும் கொடுப்பனவுகள், வங்கிக்கட்டணங்கள் மற்றும் பிற கொள்கைகளை கருத்திற்கொள்ள வேண்டும்.

ஈட்டு கடனொன்றுக்காக என்ன விடயங்களை கருத்திற்கொள்ள வேண்டும் என்பதை 16 vital facts you need to know before applying for a housing loan. என்ற எமது ஆக்கத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

வீட்டுக்கடனுக்கு தேவையான ஆவணங்கள் ஃ தகவல்கள் வருமாறு

  • வருமான விபரங்கள்
  • தாயுறுதி, தோம்பு (பத்திரு) மற்றும் அனுமதியளிக்கப்பட்; நிலஅளவீட்டுப்படம் (இறுதி 10 வருடங்களுள் வரையப்பட்டது).
  • உள்ளுர் அதிகாரசபையிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கையளிக்கப்படாமைக்கான நற்சாட்சி சான்றிதழ், உடைமைச்சான்றிதழ் வீதிக்கோட்டுமதிப்பீட்டு சான்றிதழ் கட்டட சான்றிதழ்
  • உள்ளுர் அதிகார சபை வழங்கிய இறுதி காலாண்டுக்கான வரிப்பற்றுச்சீட்டு மற்றும் மதிப்பீட்டு அறிக்கை (வரிப்பனம்)
  • கணிய அளவையியல் (டீழஞ) (வீடு கட்டுவதாயின்)
  • அனுமதிக்கப்பட்ட கட்டட அளவைப்படம், வங்கிக்கு சார்பான அற்றொனித் தத்துவ பத்திரத்துடன் கூடிய விற்பனைக்கான ஒப்பந்தம் (கட்டடத்தினை கொள்வனவு செய்வதாயின்)
  • தேசிய அடையாள அட்டை பிரதி அல்லது கடவுச்சீட்டு பிரதி
  • இறுதி 3 மாத சம்பள பற்றுச்சீட்டு
  • உங்கள் கொடுப்பனவு உறுதி செய்யப்பட்டு உங்கள் தொழில்வழங்குனரால் வழங்கப்படும் கடிதம்
  • இறுதி 3 மாத சம்பளத்தையும் காட்டும் வங்கி கூற்று.
  • வேறு வங்கிகளில் கடன் பெற்றிருப்பின் அது தொடர்பான தகவல்கள்
  • திருமணப்பதிவு சான்றிதழ் (கூட்டு விண்ணப்பதாரர்களுக்கு)

உங்கள் கடன் அனுமதிக்கப்பட்டவுடன் என்ன நடக்கும்?

உங்களது அடகுக்கடன் விண்ணப்பம் அனுமதிக்கப்பட்டவுடன், அனுமதிக்கப்பட்ட கடன் தொகையை வழங்க முன் கீழ்வரும் ஆவணங்களால் உங்களால் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

  • அடகு உடன்படிக்கை

அடகு உடன்படிக்கையானது அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு ஒரு சட்டத்தரணியின் சான்றழிப்புடன் கையொப்பமிடப்படல் வேண்டும்.

  • கடனாளியின் ஆயள் காப்பீடு

இறப்பினால் ஏற்படும் கடனிற்கான அபாயத்தை குறைக்க கடனாளி ஆயள் காப்பீடு ஒன்றினை பெற்றிருக்க வேண்டும் என்று வங்கியினால் கோரப்படும்.

  • உரிமை தொடர்பான காப்பீடு

உரிமை தொடர்பாக ஏதாவது பிரச்சினைகள் அல்லது நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டால் கடனாளியினால் அதனை தீர்க்க முடியவில்லையென்றால் சொத்தின் உரிமை தொடர்பான காப்பீட்டை மேற்கொள்ளுமாறு வங்கியினால் கோரப்படும்.

  • சொத்தின் மீதான காப்பீடு

அடகுக்கடனானது ஏற்கனவே கட்டிமுடிக்கப்பட்ட கட்டிடத்தை கொண்ட ஒரு சொத்தின் மீது பெறப்படுமாக இருந்தால் அந்த கட்டிடத்திற்காக பெறப்பட்டுள்ள காப்பீடு தொடர்பான ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

  • வங்கியின் நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள்

ஆவணங்களுடன் வங்கியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் என்பவற்றிலும் கையொப்பமிட வேண்டும்.

If you would like more details or assistance with your requirements, Please CONTACT US


Please enter below any questions or recommendations to improve this article