இலங்கையில் மிகச் சிறந்த வீட்டுக் கடன் தொகையை கண்டுபிடியுங்கள்

துரித வீட்டுக் கடன் தேடுகை

வங்கி வட்டி விகிதம் மாதாந்திர திருப்பிச் செலுத்துதல்
கூடுதல் தகவல்கள்
கூடுதல் தகவல்கள்
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட தேதி :- 2021-10-15

**மாதாந்த ஆரம்ப திருப்பிச் செலுத்தும் தொகைகளாவன விளம்பரப்படுத்தப்பட்ட வீதம், கடன் தொகை மற்றும் உள்ளிடப்பட்ட காலத்தின் அடிப்படையில் மட்டுமே மதிப்பிடப்படும். வீதங்கள், கட்டணங்கள் மற்றும் விதிப்பனவுகள் மற்றும் உங்கள் கடன் தொகை, கடன் காலம் மற்றும் கடன் வரலாற்றைப் பொறுத்து கடனுக்கான மொத்த செலவு மாறுபடலாம். உண்மையான திருப்பிச் செலுத்துதல் உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைகள் மற்றும் வட்டி வீத மாற்றங்களைப் பொறுத்ததாகும்.

வீட்டுக் கடன் கால்குலேட்டர்



Rs. 

Rs. 
 %
 Years

உங்களது கணக்கிடப்பட்ட மாதாந்தம் செலுத்தப்பட வேண்டிய தொகை

Rs  70.000

இத் தொகையானது மாதாந்தம் செலுத்தப்படும் தவணை முறை தொகையின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது (EMI)




சிரமற்ற துரித கடன் விண்ணப்பத்தை பெற உதவி செய்கிறோம்


மறுப்பு

மேலே காட்டப்பட்டுள்ள மதிப்புகள் மதிப்பீடுகள் மட்டுமே. மேற்கூறிய கணக்கீட்டிற்குப் பயன்படுத்தப்படும் வட்டி விகிதம் 5 வருட நிலையான வீட்டுக் கடன் வட்டி விகிதமாகும், மேலும் இது வங்கியின் சம்பள ஒதுக்கீட்டிற்கு உட்பட்டது. உங்கள் ஆவணங்கள் மற்றும் மதிப்பீட்டைப் பெற்ற பிறகு, இறுதி வட்டி விகிதம் வங்கியால் தீர்மானிக்கப்படும்.

Wavy01

வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்க முன்னர் நீங்கள் அறிந்திருக்க வேண்டிய 16 முக்கிய விடையங்கள்

வீட்டுக் கடனானது வணிக வங்கிகளால் அதி போட்டி முறையில் வழங்கப்படும் வளர்ந்து வரும் முறையாகும்.

வழிகாட்டியை வாசிக்கவும்
Wavy01

உங்களது வீட்டுக் கடனுக்கான விண்ணப்பம் சம்பந்தமான ஆலோசனையை பெறுங்கள்

எமது அனுபவம் வாய்ந்த ஆலோசனையாளர்கள் மிகச் சிறந்த தெரிவினை வழங்குவதுடன் விண்ணப்பிக்கும் முறைமைக்கும் வழிகாட்டுவார்கள்

ஆலோசனையை பெறுங்கள்
Wavy01

உங்கள் வரவு செலவு திட்டத்திட்கு ஏற்ற சொத்துக்கள்

வீட்டுக் கடன் தொடர்பில் அதிகமாக கேட்கப்பட்ட கேள்விகள் பாவனையாளர்கள் வீட்டுக்கடன் மற்றும் கணிப்பிடப்படும் முறைமைகள் பற்றி அதிகமாக கேட்கும் கேள்விகளை அறிந்து கொள்ளுங்கள்


வீட்டுக் கடன் என்றால் என்ன?

வீட்டுக் கடன் அல்லது அடமானமானது குடியிருப்பு சொத்தொன்றை வாங்கும் ஒருவருக்கு (முற்பணமாக) வழங்கப்படும் ஒரு வகை கடனாகும். வீட்டினை வாங்குபவர் கடன் வழங்கும் நிறுவனத்திற்கு அதனை தவணைமுறையில் மீளச் செலுத்துவதற்கு பொறுப்புதாரியாவார், பொதுவாக, இக் கடன் முறைமையை பயன்படுத்தி பெறப்படும் கடனானது வீடு வாங்குபவர் கடனை மீளச்செலுத்த முடியாத சந்தப்பத்தில் பிணை (பாதுகாப்பு) என கருதப்படும்.

கடனொன்றிற்கு விண்ணப்பிப்பதற்கான அடிப்படை தேவைகள் என்ன?

வீட்டுக்கடனிற்காக விண்ணப்பிக்க முடியுமான வயதெல்லை என்ன?

வீட்டுக்கடனை மீளச்செலுத்த வழங்கப்படும் அதி கூடிய கால எல்லை என்ன?

வீட்டுக்கடனிற்காக விண்ணப்பிக்கும் போது நான் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் என்ன?

வீட்டுக்கடனிற்கு அறவிடப்படும் வட்டி வீதம் என்ன?

EPF தொகையின் உத்தரவாதத்தில் வீட்டுக் கடனை எவ்வாறு எனக்கு பெற்றுக்கொள்ள முடியும்?

EPF வீட்டுக்கடன் உத்தரவாத்தின் அடிப்படையில் எந்த வங்கிகளில் நான் கடனிற்காக விண்ணப்பிக்க முடியும்?

யார் EPF வீட்டுக்கடன் உத்தரவாதத்திற்கு தகுதியானவர்கள்?

வீட்டுக்கடனிற்கான குறைந்த முற்பணத்தொகை எவ்வளவு?

கடன் செலுத்த என்னிடம் காணப்பட வேண்டிய மிகக் குறைந்த வருமானம் எவ்வளவு?

நாட்டில் வசிக்காத இலங்கையர்கள் வீட்டுக்கடனிற்கு விண்ணப்பிதற்கான தகைமைகள் என்ன?

இக் கடன்களுக்கான மீள் செலுத்துதலை எந்த நாணயங்கள் மூலமாக மீளச்செலுத்த முடியும்?

தொழில்முறை பிரிவுகளின் கீழ் கடனொன்றிற்கு விண்ணப்பிதற்கு யார் தகுதியானவர்?

இலங்கையின் அரச பணியாளர்களுக்கு வழங்கப்படும் வீட்டுக்கடன்கள் எவை?

 வீட்டுக் கடன் ஒப்பீடு

தனக்கான சொந்த வீடொன்றை கட்டுவது ஒவ்வொருவரதும் விருப்பமாகும். வேறொருவரது வீட்டில் வசிப்பதை விட, உங்களது சொந்த வீட்டில் வசிப்பது உங்களுக்கு மிகவும் உணர்வுபூர்வமானதாகும். உங்களுக்கு விரும்பிய போல் அதனை அலங்கரிப்பதற்கும் உங்களுக்கு விரும்பிய வகையில் அதில் மாற்றங்களை செய்வதற்கும் உமக்கு சுதந்திரம் உண்டு. நீங்கள் வீட்டினை அடிக்கடி மாற்றிக்கொண்டு இருக்க வேண்டிய தேவை இல்லை என்பதை உறுதியளிக்கிறது. இந்த கனவை நனவாக்க செய்வதை விட சொல்வது மிக சுலபமாகும். தற்காலத்தில் வீடொன்றை கட்டும் செலவினம் மிக அதிகமாக காணப்படுவதால் உங்களுக்கு நீங்களே பணம் திரட்டி செய்வது அசாத்தியமானது. இத்தருணத்தில் தான் அடமான முறையில் கடன் பெறுவதை தெரிவு செய்வதனை கருத்தில் கொள்ள வேண்டும்.

வங்கிகள் வெவ்வேறு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் பலவித வங்கிக் கடன்களை வழங்குகின்றன. சில கடன்கள் விசேட சலுகைகளை கொண்டது, அதே நேரம் பிற கடன்கள் தளர்த்தப்பட்ட நிபந்தனைகளை கொண்டது, அதாவது 60 வயதிற்கு மேற்பட்டோர் கூட அவற்றிற்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், இத்தனை தெரிவுகளுடனும், மிகச் சரியானதை தெரிவு செய்வது சிரமமாகும். இச் சந்தர்ப்பத்தில்தான் உங்களுக்கு வீட்டுக்கடன் தொகையினை ஒப்பிடும் கணிப்பானை பயன்படுத்தி பல தெரிவுகளுக்கு மத்தியில் சரியானதை தெரிவு செய்ய உதவி செய்யும். வீட்டுக்கடன் வட்டி வீதம், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் மீளச்செலுத்தும் கால எல்லைகளை ஒப்பிட்டு சிறந்தவொன்றை தெரிவு செய்ய இது மிகச்சிறந்ததாகும். இந்த ஆன்லைன் கருவியானது ஒவ்வொரு வங்கிக்கும் சென்று தனித்தனியாக தகவல்களை திரட்டுவதை விட உங்களது நேரத்தை மிகவும் மிகுதப்படுத்துகிறது.

வங்கிகளிலிருத்து வீட்டுக்கடன் பெறுவது மீளச்செலுத்துகை, வீட்டினை கைப்பற்றல் போன்ற அபரிமிதங்கள் காணப்படுவதால் உங்களது தெரிவில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சில வங்கிகள் சீரிய நில கடன் திட்டத்தினையும் அதற்கு மேலாக சிறந்த அடமான விகிதங்களையும் உருவாக்கி வழங்க முடியும். ஆனால் காலவோட்டத்தில், நீங்கள் கற்பனை செய்ததை விட அதிகமான தொகையினை செலுத்துவதை உணர்வீர்கள். எனினும், நீங்களே சுயமாக செலவிடுவதிலும் ஆபத்து உள்ளது. ஒரு நிலம் வாங்குகையில் அதிலுள்ள நுணுக்கமான விடையங்கள் மற்றும் எதனை சரிபார்க்க வேண்டும் என்பதை அறியாதிருப்பின் நீங்கள் மோசடிகளால் பாதிக்கப்படுவீர்கள். எனினும், வங்கிகளில் நீங்கள் கையளிக்கும் ஆவணங்களை நிபுணத்துவம் கொண்ட சட்டக்குழு சரிபார்ப்பதால் இந்த பிரச்சினைகளிலிருந்து தவிர்ந்து கொள்ள முடியும். எனவே, ஒரு வீட்டுக் கடனிற்காக கைச்சாத்திடுவது நேர்மறை மற்றும் எதிர்மறை விடையங்களை உள்ளடக்கியுள்ளது, புத்திசாலித்தனமான தெரிவுகளை மேற்கொண்டு அதனை சிறந்த முறையில் பயன்படுத்துவது உங்களது பொறுப்பாகும்.